2026 மே 04, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 'நீல அலை' திட்டத்தின் கீழ் புதிதாக அங்கத்தவர்கள் இணைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 'நீல அலை' திட்டத்தின் கீழ் புதிதாக அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பொருட்டு வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் 'நீல அலை' அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா அக்கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை, காகிதநகர் போன்ற பகுதிகளில் இவ் வேலைத்திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காவத்தமுனை பிரதேச அமைப்பாளர் எஸ்.ஏ.எம்.கலீம் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட மகளீர்களுக்கான கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

காவத்தமுனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் கலந்துகொண்டு கட்சியில் இணைந்து கொண்ட மகளீருக்கான அங்கத்துவ அடையாள அட்டைகளை வழங்கிவைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .