2026 மே 04, திங்கட்கிழமை

பெண் தொழில் முயற்சியாளர்களின் மூன்று நாள் கண்காட்சி

Kogilavani   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.நூர்தீன்


பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காவ்யா நிறுவனம் மற்றும் உலக தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) ஆகியவை இணைந்து இக்கண்காட்சியை நடத்தவுள்ளது.

இக்கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வில், அமைச்சர் பசீர் சேர்குதாவூத், பிரதியமைச்சர் வி.முரளீதரன், மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தொடர்பாக விளமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தாலைமையகத்தில் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .