2026 மே 04, திங்கட்கிழமை

'றிஸனாவின் சடலத்தை கொண்டுவர பெண்ணுரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை'

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

'சவூதி அரேபியாவில் மரணதண்டனைக்குள்ளான றிஸனா நபீக்கின் ஜனாசாவை(சடலத்தை) இலங்கை;கு கொண்டு வர எந்தவொரு பெண்னுரிமை அமைப்புக்களும் நடவடிக்கை எடுக்கவில்லை' என மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் பிரதிநிதியும் ஓட்டமாவடி 'அன்பு இதயம்' எனும் நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் தலைவியுமான ஜனாபா எம்.சபீக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற வன்முறைக்கெதிரான பெண்கள் வலையமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சபீக்கா மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சவூதி அரேபியாவில் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கையின் மூதுரைச் சேர்ந்த றிஸானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானார்.

அவரின் ஜனாசாவை (சடலத்தை) அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு விரும்பிய போதும் ஜனாசா இங்கு அனுப்பப்படவில்லை. இது எல்லோருக்கும் வேதணையை தந்தது.

இங்கு பல்வேறு பெண் செயற்பாட்டாளர்கள், மற்றும் பெண்கள் அமைப்புக்கள் இருந்தும் மூதூரைச் சேர்ந்த றிஸானாவின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டுவர எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் அமைப்புக்கள் மிகவும் உற்சாகமாக செயற்பட வேண்டும்.

  Comments - 0

  • ashraff Monday, 15 April 2013 07:02 PM

    வரவேற்ககூடிய விடயம்தான். இவ்வாறான விடயங்களில் பெண்கள் மிகவும் கவனமெடுக்க வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .