2026 மே 04, திங்கட்கிழமை

வசதி குறைந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வசதி குறைந்த மாணவர்களுக்கு சைக்கிள்களும்  வழங்கப்பட்டதுடன், மருத்துவ உதவிக் கொடுப்பனவும் வழங்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வின்போது, 35 மாணவர்களுக்கு சைக்கிள்களும் மருத்துவ உதவிக் கொடுப்பனவும் வழங்கப்பட்டன.

யுனிசெப் நிறுவனத்தின் நிதியளிப்பில் சைக்கிள்களும் தேசிய சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தினால் மருத்துவ உதவிக் கொடுப்பனவும் வழங்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.மஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அதிதிகளாக யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி எஸ்.நிமலன், கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.முபாறக், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, வாழைச்சேனை நன்னடத்தை பொறுப்பாளர் எம்.எம்.எச்.நஜிமுதீன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .