2026 மே 04, திங்கட்கிழமை

கடலில் மூழ்கிய இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வாகரைக் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் இன்றுக்காலை ஒன்பது மணியளவில் மீட்கப்பட்டதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித ஜயரத்ன தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில்  வாகரை ஐம்பது வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த கமலன் லதுஷன் என்ற 16 வயது இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தான்.

மேற்படி இளைஞனின் சடலம் வாகரை முகத்துவாரக் கடற்பகுதியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.

கடற்படையினரும் மீனவர்களும் வாகரைப் பொலிசாரும் கூட்டாக இணைந்து சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் வாகரைப் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .