2026 மே 04, திங்கட்கிழமை

கம்பஹாவில் கடத்தப்பட்ட ஜே.வி.பி தொண்டர் ஏறாவூரில் விடுவிப்பு

Super User   / 2013 ஏப்ரல் 18 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கம்பஹாவில் வைத்துக் கடத்தப்பட்டவர் இன்று வியாழக்கிழமை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹாஇ ஊறாபொல சந்தியில் வைத்து நேற்று புதன்கிழமை ஒரு மணியளவில் கடத்தப்பட்ட இவர் இன்று பகல் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம். ஹிரான் தெரிவித்தார்.

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் கம்பஹா, லாவுல்பிட்டியஇ வத்துருகமவைச் சேர்ந்த 42 வயதான வித்தானகமகே சன்னபியலால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜீப் வண்டியொன்றில் வந்திருந்த ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றே தன்னைக் கடத்தியதாகவும் அவர்களில் ஒருவர் பொலிஸார் அணியும் சீருடையை  ஒத்திருந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கடத்தியவர்கள் தனது முகத்தைக் கறுப்பு துணியால் கட்டியே அழைத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடத்தல் தொடர்பாக அவரது மனைவி ஏற்கெனவே கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஏ.பெரேரா தெரிவித்தார்.

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஏறாவூர் கடைத்தெருவில் நின்று தடுமாறிய பொழுது சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவரான எஸ். எம். முனாபிர் என்பவர் இவரை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .