2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


இலங்கை போக்குவரத்துச் சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று புதன்கிழமை  காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததைக்  கண்டித்தே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பஸ் டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடிய ஊழியர்கள் பஸ் வண்டிகளை வெளியே செல்லவிடாதும் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு உள்ளிட்ட தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.
தங்களுக்கான சம்பளம் வழங்கபாடாதுவிடின் தொடர்ந்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X