2025 மே 05, திங்கட்கிழமை

வீட்டுத்தோட்டத்திற்கான மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில்  வீட்டுத் தோட்டத்தி;ற்கான மரக்கன்றுகளும் விதைகளும் கூட்டுப் பசளைகளும் உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  ஹிஜ்றா நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 19 குடும்பங்களுக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இவை வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000; ரூபா பெறுமதியான உபகரணங்களையும் மரக்கன்றுகளையும் பயிர் விதைகளையும்; கூட்டுப் பசளைகளையும்; முஸ்லிம் எயிட் நிறுவனம்; வழங்கி வைத்துள்ளது.

முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எல்.எம்.றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், முஸ்லிம்; எயிட்  நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X