2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிழக்குப் பல்கலையில் சர்வதேச மாநாடு

Super User   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு இன்று காலை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் ஆரம்பமானது.

கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்த மாநாடு நாளை வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யுத்தத்துக்கு பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் தலைப்பில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.

இதில், பங்காளதேஷின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமட் அத்துடன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தென்னாசியக் கற்கைகள் துறை இணைப்பாராசிரியர் கலாநிதி ராகுல் முகர்ஜீ, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 112 ஆய்வுக் கட்டுரைகளில் வாய்மொழி மூல மற்றும் காட்சிப்படுத்தல்களுக்காக 61 கட்டுரைகள் சர்வதே, தேசிய துறைசார் நிபுணர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டு ஆய்வு மாநாடு முதல் தடவையாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டதுடன் அது தேசிய அளவில் நடத்தப்பட்டிருந்தது. இம்முறை இந்த மாநாடு சர்வதேச அளவில் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X