2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிணறுகளும் மலசலகூடங்களும் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட மலசலகூடங்களும் கிணறுகளும் பயனாளிகளிடம் நேற்று வியாழக்கிமை கையளிக்கப்பட்டன.

'சுத்தமான குடிநீரும் சுகாதாரமான மலசலகூடமும்' என்ற திட்டத்தில் இவைகள் அமைக்கப்பட்டன.

வேல்ட்விஷன் நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 84 குடிநீர்க் கிணறுகளும் 74 மலசலகூடங்களும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிண்ணயடிக் கிராம பொதுமைதானத்தில் கிண்ணயடி மாதர் சங்கத் தலைவி பி.தங்கமலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.தினேஸ், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வேல்ட்விஷன் நிறுவனத்தின் வாழைச்சேனை பிராந்திய முகாமையாளர் பி.றோகாஸ், திட்ட இணைப்பாளர் ரீ.ஜெயராஜன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X