2025 மே 05, திங்கட்கிழமை

பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெண் சுயதொழில் முற்சியாளர்களுக்கான கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் சுயதொழில்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை  எடுத்து வருகின்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பெண் சுயதொழில் முயற்சியாளர்களை தெரிவுசெய்யும் மற்றும் அறிவூட்டும் கூட்டங்கள் காவியா பெண்கள் அமைப்பினால் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் அடிப்படையிலேயே காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவியா பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  யோகமலர் அஜித்குமார்,  அதன் பணிப்பாளர் உதயராணி ஜெரோம், சமூகசேவை உத்தியோகத்தர்கள,; பெண் தொழில் முயற்சியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்

சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களை தெரிவுசெய்வதுடன் அவர்களின் சுயதொழிலை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென காவியா பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X