2025 மே 05, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மதுபானங்களை தோணியில் கடத்த முயன்றவர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இருந்த நாவற்காட்டுப் பகுதிக்கு சட்டவிரோதமாக தோணி ஊடாக மதுபானம் கடத்த முற்பட்டவர் மட்டக்களப்புப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 42 போத்தல்களை கொண்ட 31 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் மதுபானத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சத்துருக்கொண்டான் மதுபான சாலையில் இருந்து மதுபானத்தை கொள்வனவு செய்து மட்டக்களப்பு வாவி ஊடாக தோணி மூலம் நாவற்காட்டுப் பகுதிக்க சட்டவிரோதமாக கடத்திச் செல்வதாக மட்டக்களப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக  மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கிஞ்சிலி குணசேகரவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப் புலன் விசாரணைப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  ரி.ஏ.என்.டீ.திம்பட்டு முணுவ தலைமையில் ஏ.ரி.எம்.சுபியான்,என்.தமிழ்ச்செல்வன் டபிள்யு.ரி.ஏ.மஜீத்,டபிள்யு.எம்.பிரியங்கர ஆகிய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X