2025 மே 05, திங்கட்கிழமை

துவிச்சக்கர வண்டி திருடியவர் கைது

Super User   / 2013 செப்டெம்பர் 22 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவக்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியொன்றை திருடியவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள சம்பத் வங்கிக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியை திருடிக் கொண்டு செல்ல முற்பட்ட நிலையில் குறித்த திருடன் பொதுமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்த பொலிஸார் திருடிய துவிச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X