2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரட்டவிருவோவின் மட்டு. மாவட்ட அமைப்பின் மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தினால் மாவட்டம் தோறும் ஸ்;தாபிக்கப்பட்டுள்ள 'ரட்டவிருவோ' எனப்படும் கடல் கடந்த வீரர்களின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பின் மீளாய்வுக் கூட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு ஓசியனிக் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் எஸ்.சுரேஸ்குமார், இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலக பொறுப்பதிகாரி எம்.நிரூபவாத், 'ரட்டவிருவோ' அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 'ரட்டவிருவோ' அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் குழுவின் வேலைத்திட்ட முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .