2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் தொழில்ச் சந்தை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



-மாணிக்கப்போடி சசிகுமார்


தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையின் ஏற்பாட்டில் தொழில்ச் சந்தை ஒன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் 500 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இந்த தொழில்ச் சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், கம்பனிகள், வங்கிகள், உயர்கல்வி நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், பல்வேறு தொழில் வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தகுதியானவர்களை வேலைக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த தொழில்ச் சந்தையின்  ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா, மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டில் இளைஞர்கள் மத்தியில் தொழில் இல்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாகவுள்ள நிலையில், அவ்வாறுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து தொழில்ச் சந்தை வேலைத்திட்டத்தை மாவட்ட ரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

தொழிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ள இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வழங்கக்கூடிய நிலையிலுள்ள தொழில் வழங்குநர்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி இளைஞர், யுவதிகள் பொருத்தமான தொழிலைத் தேர்ந்தெடுக்கவும் தொழில் வழங்குநர்கள் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்கவும் கூடிய வகையிலான வேலைத்திட்டமாக இந்த தொழில்ச் சந்தை அமைகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X