2025 மே 05, திங்கட்கிழமை

ரொக்கட் லோஞ்சர் மீட்பு

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

வாகரை பிரதேசத்தில் ரொக்கட் லோஞ்சர் ரக குண்டொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீடகப்பட்டுள்ளது. நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 40 மில்லி மீற்றர் ரக ரொக்கட் லோஞ்சர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை கோமந்தமடு களப்பு வீதியில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் பற்றைக் காட்டை வெட்டி துப்பரவுசெய்யும் பணியில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று  குண்டினை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X