2025 மே 05, திங்கட்கிழமை

உலக நாச்சியாரின் சிலை சேதம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள உலக நாச்சியாரின் சிலையை உடைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை காத்தான்குடி  பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதுகாப்பு ரோந்து கடமையில் நேற்று நள்ளிரவு வீதியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் குறித்த உருவச் சிலையை சேதப்படுத்தியவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சிலையின் கைப்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தனின் நிதியொதுக்கீட்டில ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியில் பெரியார்களின் உருவச்சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே இந்த பிரதேசத்திலுள்ள உருவச்சிலையொன்று சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • Nebosh Tuesday, 24 September 2013 01:22 PM

    அவனது கையை உடைக்கணும் அதுதான் சரி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X