2025 மே 01, வியாழக்கிழமை

போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதில் அமைந்துள்ள போரதீவுப் பற்று பிரதேசத்தில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பலத்த மழை பெய்ய வேண்டிய இக்காலத்தில் இம்மாத ஆரம்பத்தில் மாத்திரம் சிறிதளவு மழை இப்பகுதியில் பெய்துள்ளது.

இதனைவிட தொடர்ந்து வெயில் எறிப்பதனால் தொடர்ச்சியாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். 

மக்களின் குடி நீர் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்க போரதீவுப்பற்று பிரதேச சபை பவுஸர்கள் மூலம் குடிநீரை வழங்கி வருகின்றது. இருந்த போதிலும் தமக்கு வழங்கப்பட்டு வரும் இக்குகுடிநீர் போதியளவானதாக இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றர்.

பொறுகாமம், பிலாலிவேம்பு, புன்னக்குளம், வெல்லாவெளி, விவேகானந்தபுரம். போன்ற பல கிராமங்களில் இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .