2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கில் மீள் குடியேற்றம் முற்றுப்பெற்றது: முரளிதரன்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் முற்றுப்பெற்று விட்டதாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களின் நிலைமைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ஆராயப்பட்ட நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்ட இக் கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கே.ஜானக சுகதாச, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுதீன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இங்கு தொடர்ந்து  கருத்து தெரிவித்த பிரதியைமச்சர் முரளிதரன் கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் முற்றுப் பெற்று விட்டது.
கடைசியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கருங்காலியடிச்சேனை கிராமத்தில் 22 குடும்பங்களையும் கல்லிச்சை கிராமத்தில் 15 குடும்பங்களையும் மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு தற்காலிக கொட்டில்கள் அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கருங்காலியடிச்சேனையில் இராணுவ முகாம் இருந்த இடமாகும். இங்கு 2013ம் ஆண்டு கிழக்கு மாகாண படை கட்டளைத்தளபதியிடம் நான் விடுத்த வேண்டுகோளையடுத்து தற்போது அந்த பிரசேத்தில் இருந்து இராணுவ முகாம் அகற்றப்பட்டு அங்கு மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கை பூர்;த்தியாக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் சில இடங்களுக்கு மக்கள் போகாமல் இருக்கலாம். அதே போன்று வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து மட்டக்களப்புக்கு வருகை தந்தவர்களும் அங்கு செல்லாமல் மட்டக்களப்பில் உள்ளனர். இதில் மனைவியை வன்னியைச் சேர்ந்தவர்களாகவும், கனவன் மட்டக்களப்பை சேர்ந்தவராகவும் அல்லது கனவன் வன்னியை சேர்ந்தவராகவும், மனைவியை மட்டக்களப்பை சேர்ந்தவராகவும் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் 800 வீடுகளும் ஆயிரம் மல சல கூடங்களும் நிர்மானிக்கப்படவுள்ளன. இதில் ஏற்கனவே 400 மலசல கூடங்கள் மீள் குடியற்ற பிரதேசங்களில் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு மீள் குடியேற்ற பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே போன்று இவ்வாண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மாத்திரம் 12000 இலசட் ரூபா நிதி யொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியினைக் கொண்டு மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

அதற்காக மக்களிடமிருந்து திட்டங்களை பெறும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றோம். இதற்கு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்பு முக்கியமானாதாகும்.

இந்த கூட்டத்தில் மீள் குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோன் கலந்து கொள்வதாக இருந்தார்.

ஆனால் அவருக்கு சுகயீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. ஆமைச்சினுடைய செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .