2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆரையம்பதியில் கிணறும் மலசலகூடங்களும் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


ஆரையம்பதி கிழக்கு பகுதியில்  06 குடும்பங்களுக்கு மலசலகூடங்களும்  ஒரு குடும்பத்துக்கு கிணறு ஒன்றும்  அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை மேற்படி குடும்பங்களின் பாவனைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (02) கையளித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் அனுசரணையுடனும்  மட். ஆரையம்பதி நண்பர்கள் குழாத்தின் ஏற்பாட்டிலும் இலண்டனில்  வசிக்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த றொனால்ட் தனலெட்சுமி என்பவரின் உதவியுடனும் இவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.  

அத்துடன், மேற்படி பகுதியிலிருந்து யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்துக்கு  தெரிவான  மாணவி ஒருவருக்கு மாதாந்தம் 10,000   ரூபா படி  400,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X