2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் களவுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அவற்றிலிருந்து பொதுமக்கள் தமது உடமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த அறிவித்தல் ஒலி பெருக்கி மூலம் நேற்று (04) காத்தான்குடி பொலிஸ் பிரிவு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடுகளில் களவு போகும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன.

வீட்டிலிருந்து உரிமையாளர்கள் வெளியில் செல்லும் போது முடியமான வரை வீட்டில் ஆட்களை வைத்து விட்டு செல்லுமாறும் வெளியே செல்லும் போது வீட்டுக் கதவுகளையும் மற்றும் ஜன்னல் கதவுகளை சரியாக மூடிவிட்டு செல்வதுடன் தமது வீட்டு உடமைகளை பாதுகாப்பாக வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

களவுச் சம்பவங்கள் இடம்பெறுமாயின் உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அவிக்குமாறும் காத்தான்குடி பொலிஸார் இந்த அறிவித்தலின் போது கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .