2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஹிஸ்புல்லாஹ்வை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு

Super User   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொருட்களின் விலை ஏற்றத்திற்கு அரசாங்கம் பொறுப்பல்ல என தொடர்ந்து பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்து வருகின்றமை தொடர்பில் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வருமாறு காத்தான்குடி நகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் நேற்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை குறுஞ்செய்தியொன்றின் மூலம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் விடுத்துள்ளார்.அவர் அனுப்பிய குறித்த குறுஞ்செய்தியினை ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார். இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு......

பொருட்களின் விலை ஏற்றத்துக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்ற கருத்தை அப்பாவி ஏழை மக்கள் முன்பாக நீங்கள் தொடர்ந்து கூறி வருகின்றீர்கள்.உங்களின் இந்த கருத்து அப்பட்டமான பொய்யாகும். உங்களின் வார்த்தைகளை அப்பாவித்தனமாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக்கூடாது.

உங்களின் இக்கருத்து தொடர்பாக தேசிய ஊடகமொன்றில் (தொலைக்காட்சி அல்லது வானொலி) அல்லது பொருத்தமான ஒரு வழிமுறையில் உங்களோடு பகிரங்கமாக விவாதிப்பதற்கு உங்களை நான் பகிரங்கமாக அழைக்கின்றேன்.நீங்கள் தயாரா? உங்களின் பதிலை மூன்று நாட்களுக்குள் எதிர்பார்க்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .