2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்; மட்டக்களப்பில் ஆயத்தக் கூட்டம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாவட்ட ரீதியிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான அறிவுறுத்தல் குறித்த ஆயத்தக் கூட்டமொன்று இன்றைய தினம் மாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது, 6000பேர் கலந்து கொள்ளவுள்ள இம்மாவட்ட ரீதியான அறிவுறுத்தல் கூட்டத்துக்கான இடம், போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதிகள், ஏற்பாடுகள் எள்ளிட்ட அனைத்து விடங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எஸ்.உதயகுமார், திணைக்களத் தலைவர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X