2025 மே 02, வெள்ளிக்கிழமை

பெண் சுயதொழில் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண்களை வலுவூட்டி அவர்களின் உற்பத்தித் திறனை மேலும்  அதிகரிக்கும் வகையில் விசேட பயிற்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் சனிக்கிழமை (08) ஆரம்பமான இந்த பயிற்சித் திட்டம் திங்கட்கிழமையுடன் (10) நிறைவுறும்.

இதில்,  மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 40 பெண் சுயதொழில் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சுயதொழில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண்களை வலுவூட்டி அவர்களின் உற்பத்திகளுக்கு சர்வதேச ரீதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இலங்கை முகாமைத்துவத்தில் பெண்கள் அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதில் இலங்கை முகாமைத்துவத்தில் பெண்கள் அமைப்பின் தலைவி சுலோசனா சேகரா, காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி ஜோதிமலர் அஜித்துகுமார், மட்டக்களப்பு இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சுயதொழில் உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் வலுவாக்கப்பட்டு அவர்களின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்து  சர்வதேச ரீதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகள் எதிர்காலத்தில் வறுமை நிலையற்ற மாவட்டமாக உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .