2025 மே 02, வெள்ளிக்கிழமை

கைகலப்பினால் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள  குளத்துமடுக் கிராமத்தில் குமாரியன் ரட்ணசிங்கம் (வயது 42) என்ற குடும்பஸ்தர்  தாக்குதலினால் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தக் தாக்குதல்ச்  சம்பவத்தை கண்டு ஓடிவந்த இவரது சகோதரியான குமாரியன்  நிர்மலா (வயது 28) என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இதற்கிடையில், இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் அப்புகாமி சுதாகரன் (வயது 20) என்பவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய கம்புடன் வாழைச்சேனை பொலிஸில் சரணடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மரணமடைந்த நபரும் இவரது இரண்டாவது மனைவியும் தொழிலுக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த நிலையில், இவர் 03 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், இவரது இரண்டாவது மனைவியும்  02 வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பி  தனது தாயின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

மரணமடைந்த நபர்  மனைவியின் தாய்; வீட்டுக்கு திங்கட்கிழமை (10) மாலை சென்ற வேளையில் இரண்டாவது மனைவியின் சகோதரனுக்கும் இவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பதாக மாறியது. இதன்போது, இரண்டாவது மனைவியின் சகோதரனினால் இவர் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பார்வையிட்ட  வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.எம்.ஹுஸைன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு  பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தற்போது சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பான விசாரணைகளை  வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X