2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு பல்கலையின் பழைய மாணவர் சங்கத்தினை ஸ்தாபிக்க நடவடிக்கை

Super User   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் பல்கலைக்கழக பழைய மாணவர்  சங்கத்தினை ஸ்தாபிக்கும் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் ஒன்றினை ஸ்தாபித்தல், பழைய மாணவர்களிடையே வலைப்பின்னலான தொடர்பினை ஏற்படுத்தல், எதிர்காலத்திற்கான வளர்ச்சி திட்டம் ஒன்றை தயாரித்தல், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்படவுள்ளது.

எனவே இந்த கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு முன்னோடி ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்வதற்கு 0776651925,  077 7915940,  077 60449611 என்ற கையடக்க தொலைபேசி மூலமாகவோ அல்லது mano1965@yahoo.com, vijines@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொள்ளமுடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X