2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி - ஹதரல் மௌத் நகரங்களுக்கு இடையில் உடன்படிக்கை

Super User   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்


யெமனிலுள்ள ஹதரல் மௌத் நகரிற்கும் காத்தான்குடி நகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடப்படும் என இந்தியாவிலுள்ள இலங்கைக்கான யெமன் தூதுவர் டாக்டர் கதீஜா றட்மான் முஹம்மட் தெரிவித்தார்.

இதனூடாக இரு நகரங்களுக்கும் இடையில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் இன்று காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். இதன்போது காத்தான்குடி நகர சபைக்கு விஜயம் செய்து நகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.இதன் அங்கு உரையாற்றிய அவர்,

" அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா என்னை சந்தித்தார். அப்போது காத்தான்குடி பற்றியும் அதன் பூர்வீகம் யெமனிலுள்ள கஹ்தான் என்ற பரம்பரையிலிருந்து வந்ததாகவும் கூறி காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவரின் அழைப்பின் பேரில் நான் இங்கு வந்தேன். காத்தான்குடியில் யெமனிலுள்ள கஹ்தான் என்ற பரம்பரை இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். இதனால் யெமன் நாட்டுக்கும் இலங்கையின் காத்தான்குடி நகரத்திற்கும் இpடையில் தொடர்புள்ளது.

அதை மேலும் வலுப்படுத்துவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இலங்கை மற்றும் யெமன் ஆகிய அரசாங்கங்களினது அனுமதியுடன் யெமன் நாட்டிலுள்ள ஹதரல் மௌத் எனும் நகரத்திற்கும் காத்தான்குடி நகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடப்படும்.

இதனூடாக இரு நகரங்களுக்கும் இடையில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்ள்வேன். இதற்காக நான் யெமனிற்கு சென்றதும் அங்குள்ள உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடி அவரை இலங்கைக்கு அனுப்புவதுடன் ஹதரல் மௌத் நகரத்தின் ஆளுநரையும் காத்தான்குடிக்கு அனுப்புவேன்.

எதிர்காலத்தில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களை யெமன் க்கு ஏற்றுமதி செய்யவும் யெமனின் பொருட்களை இலங்கை;கு இறக்குமதி செய்யவும் முடியும். காத்தான்குடி நகரம் யெமனை போல அழகாக காட்சியளிக்கின்றது. இங்கு நான் வருகை தருவதற்கு காரணமாக இருந்த பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X