2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சைக்கிளைத் திருடியவர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியில் சைக்கிளொன்றையும் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்ததாகக் கூறப்படும் கூழாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை சிவில் பாதுகாப்புக் குழுவினர் மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்ததாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றில் முன்பாக திங்கட்கிழமை (11) இரவு  நிறுத்தி வைக்கப்பட்ட  சைக்கிளை சந்தேக நபர்; எடுத்துக்கொண்டு ஓடுவதைக் கண்ட குறித்த வீட்டிலுள்ளவர்கள் கூக்குரலிட்டனர்.  இந்த நிலையில் சந்தேக நபரை ஒரு குழுவினர் துரத்திச்சென்றபோது, இவர்  வீதியில்  சென்ற பெண்ணொருவரின் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்தார்.

இவை தொடர்பில் தாண்டவன்வெளி சிவில் பாதுகாப்புக் குழுவுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவாகச் சென்று சந்தேக நபரை மடக்கிப்பிடித்ததாகவும் பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X