2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நித்தியானந்த திரயோதசி விழா- கீதை காட்டும் பாதை சொற்பொழிவு

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


அகில உலக கிருஸ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நித்தியானந்த திரயோதசி விழா- கீதை காட்டும் பாதை சொற்பொழிவும் புதன்கிழமை (12) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

நித்தியானந்த திரயோதசி விழா ஆரம்ப நிகழ்வுகள் கல்லடி -நொச்சிமுனையில் அமைந்துள்ள ஹரேகிருஸ்ணா நிலையத்தில் அதிகாலை மங்கள ஆராத்தியுடன் ஆரம்பமாகின. அதனையடுத்து காலை 7 மணிக்கு குருபூஜை, யாகம், தீட்சை, பஜனை, அபிசேகம், சொற்பொழிவு என்பன இடம்பெற்றன.

நித்தியானந்த திரயோதசி விழாவில், இங்கிலாந்திலிருந்து வருகை தரும் தவத்திரு பக்தி விகாசா சுவாமிகள், வேலூரிலிருந்து வருகைதரும் அகிஞ்சன கிருஸ்ண பிரபு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பிரபுக்களும் கலந்து ஸ்ரீகொண்டனர்.

இவ்விழாவின் இரண்டாம் பகுதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு ஆரம்பமானது. இதில் கீதை காட்டும் பாதை சொற்பொழிவை இங்கிலாந்திலிருந்து வருகை தந்த தவத்திரு பக்தி விகாசா சுவாமிகள் நிகழ்த்தினார். இவர், இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஸ்ண பக்திக்கழகத்தின் ஸ்தாபகர் தெய்வத்திரு பக்தி வேதாந்தா சுவாமி பிரபுபாதாவின் முதன்மை சிஷ்யர்களில் ஒருவராவார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பஜனை, கீதை காட்டும் பாதை சொற்பொழிவு, நாடகம் என்பன நடைபெற்றன.

நேற்றைய நிகழ்வில், சிறப்பு அதிதியாக மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரனும் இணைந்து கொண்டு இங்கிலாந்திலிருந்து வருகை தந்த தவத்திரு பக்தி விகாசா சுவாமிகளிடம் ஆசிபெற்றார். அத்துடன் இஸ்கான் அமைப்புடன் தானும் இணைந்து ஆன்மீகப் பணிகளினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், நேற்றைய நிகழ்வுகளில், மட்டக்களப்பு உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமாக இணையத்தின் தலைவர் வ.கமலதாஸ், மாவட்டத்திலுள்ள ஆன்மீக அமைப்புகளின் சன்னியாசிகள், பிரதிநிதிகள், பெருந்தொகையான பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

அதேநேரம், இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறுகிறது.  இதில், தவத்திரு பக்தி விகாசா சுவாமிகளால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பவற்றின் ஊடாக மாணவத் தலைவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி உரையாற்றுகிறார்.

இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கலியுகத்தின் தன்மைகள், விளக்கங்கள் பொதிந்த ஸ்ரீமத்பாஹவத புராண நூல்கள் இலவசமாக வழங்கப்படும். என்பதுடன் நிறைவில் அன்னதானமும் வழங்கப்படும் எனவும் அகில உலக கிருஸ்ண பக்திக்கழகத்தின் கிழக்கு மாகாணத் தலைவர் வாசுதேவ தத்த பிரபு தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X