2025 மே 02, வெள்ளிக்கிழமை

பட்டிப்பளையில் நெல் அறுவடை விழா

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்தில் இயற்கை நெல் அறுவடை விழா, நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம், வேர்ல்ட் விஷன் நிறுவன பட்டிப்பளை முகாமையாளர் பு.து.அணுராஜ் மற்றும் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உக்டா நிறுவன உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர், 'மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை பயிர் செய்கையில் இருந்து குறுகிய காலத்திற்குள் அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சுத்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது'என தெரிவித்தக்ர்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இதனால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் நிலை? நீரிழிவு புற்று நோய் எனபல வகை நோய்தாக்கங்களுக்கும் உள்ளாக வேண்டி ஏற்படும்' என்றார்.

'ஆகவே, நாம் எதிர்கொண்ட ஆரோக்கிய மற்ற வாழ்கையில் இருந்து விடுபட்டு எதிர்கால எமது குழந்தைகளின் வாழ்வுக்காக அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயற்பட்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவூட்ட படுகின்ற போதும் இதனை கவனத்தில் கொள்கின்ற விவசாயிகள் குறைவாகவே காணப்படுகின்றது.

ஆனாலும் இயற்கை விவசாயத்தை எவ்வாறு கடின உழைப்பு செய்தாயினும் அறிமுகப்படுத்தியாக வேண்டும் எனும் நோக்கின் அடிப்படையில் உக்டா நிறுவனம் வேலர்ல்ட் விஷன் நிறுவனத்தின் வழிகாட்டலிலும் அணுசரனையுடனும் இயற்கை வேளாண்மை செய்கையையும் ஏனைய பயிர் செய்கையும் செய்து வரும் இந் நிறுவனத்திற்கு  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X