2025 மே 02, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்கள் கற்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.  இந்நிலையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் வகுப்பொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  காத்தான்குடி பிரதேச செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஆராயும் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்றது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் இவ்வாண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் காத்தான்குடியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டு ஆராயப்பட்டன. இதன்போது, பௌதீக அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் தொடர்பில் கிராம மட்டத்தில் மக்கள்; முன்வைத்த திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி நகரசபை பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X