2025 மே 02, வெள்ளிக்கிழமை

தூய்மை வாரத்தினையொட்டி சிரமதானம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல் 


மட்டக்களப்பு மாநகர சபையின் தூய்மை வாரத்தினையொட்டி மட்.கள்ளியன்காடு இந்து மயானத்தில் மட்டு.மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார்; தலைமையில் சிரமதானப் பணி வியாழக்கிழமை; (13) முன்னெடுக்கப்பட்டது.

இப்பிரதேசம் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் டெங்கு நுளம்புகளின் உறைவிடமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இப் பகுதிப் பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில் மட்டு. வரியிறுப்பாளர் சங்கம், வர்த்தக சங்கம், ஆகியவற்றின் அனுசரணையுடன் பாரிய சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சிரமதானப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் மட்.வரியிறுப்பாளர் சங்கத்தினால் மட்டு.மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமாரிடம் கையளிக்கப்பட்டன.

இச்சிரமதானத்தின்போது கள்ளியங்காடு இந்து மயானம் துய்மைப்படுத்தப்பட்டதோடு, அப்பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாய் இருந்த இடங்களும் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X