2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிறுவர்களின் நன்மை கருதி பூங்கா திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களோடு முறைப்பாடுகளை பதியவரும் சிறுவர்களின்; நன்மை கருதி மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புதிதாக சிறுவர் பூங்காவொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வாவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இச்சிறுவர் பூங்காவை காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்திற்கு வரும் சிறுவர்கள் முழுமையாக பயன்படுத்த முடியுமெனவும் சிறுவர்களின் நன்மை கருதியே மேற்படி சிறுவர் பூங்கா நிறுவப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன மேலும் தெரிவித்தார்.

இலங்கைப் பொலிஸ் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் படை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வாவின் ஆலோசனையின் பேரில் இப்பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X