2025 மே 02, வெள்ளிக்கிழமை

பற்றைக்காடுகள் அழிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் காட்டு யானைகளின் தாக்கத்தினையும், அவற்றின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் கிரமத்தின் பிரதான வீதியின் அருகாமையில் உள்ள பற்றைகளை அகற்றும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை  (18) இடம்பெற்றது.

வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டத்தில் கச்சக்கொடிச்சுவாமிமலை – கெவுளியாமடு பிரதான வீதியின் இருமருங்கிலுமிருந்த பற்றைக்காடுகள் அழிக்கப்பட்டன.

இதில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், வன பாதுகாப்பு அதிகாரி கணேசமூர்த்தி, சமுக சேவை உத்தியோகத்தர் க.கமலராஜன், பிரதேச அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் கு.கங்காதரன், வேள்ட்விஷன் திட்ட இணைப்பாளர் நிர்மிதன், கச்சக்கொடி பொருளாதார உத்தியோகத்தர் கு.சேந்திரதாஷ் மற்றும் விவிசாய அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X