2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கரடியனாறு தானிய களஞ்சியசாலை திறப்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட கரடியனாறு பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 44 இலட்சம் ரூபா நிதி உதவியின் கீழ் சோவா நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட தானிய களஞ்சியசாலை, ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகரினால் நேற்று புதன்கிழமை (19) மாலை  திறந்துவைக்கப்பட்டது. 

ஸோஆ நிறுவனத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் எஸ். ஜெயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் எச்.ஈ.டேவிட் டாலி, சிரேஷ்ட பிரதிநிதி ஜோர்ஜ் டிலா ஹப்லரியா, திட்டத்திற்கான தலைவர் வில்லி வென்டன் பராக், திட்ட முகாமையாளர்களான சுந்தரி ஜெயசூரிய, லெஸ்லி ஜேசுராஜா, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், கமநலசேவை திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் எஸ். சிவலிங்கராஜா, செங்கலடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் ஸோஆ நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹிடோ மற்றும் பிரதேச விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X