2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜவ்பர்கான்,  பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் ஊழலை கட்டுப்படுத்த ரான்ஸ்பெரன்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் எஸ்.கௌசிகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதான நுழைவாயிலில் இது தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் நடப்பட்டதுடன் வாகனங்களில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.

நகரின் பொதுச்சந்தை, பஸ்நிலையம், பிரதான வீதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையால் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யும் பட்சத்தில் இலவச சட்ட உதவிகளையும் வழங்க எமது நிறுவனம் தயாராகவுள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X