2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வணபிதா அருட்தந்தை ஜே.வெபர் அடிகளாரின் நூற்றாண்டு விழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வணபிதா அருட்தந்தை ஜே.வெபர் அடிகளாரின் நூற்றாண்டு விழா இன்று   வெள்ளிக்கிழமை (21) மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இதன் ஆரம்ப வைபவம் நடைபெற்றது.

வணபிதா அருட்தந்தை வெபர் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஏற்பாட்டுச் சபையின் தலைவர் அருட் தந்தை ஏ.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முதல் நிகழ்வாக அருட்தந்தை ஜே.வெபர் அடிகளாருக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதனை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா நடத்தி வைத்தார்.

இந்த வைபவத்தில் நூற்றாண்டு விழாவையொட்டிய கேக் வெட்டப்பட்டதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எஸ்.உதய குமார், மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், ஏறாவூர்ந கர சபை தலைவர் அலி சாஹீர் மௌலானா, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் திருமதி எஸ்.மாசிலாமணி, மட்டக்களப்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.டேவிட், நூற்றாண்டு விழா ஏற்பாட்டுச் சபையின் இணைச் செயலாளர்களான ஏ.ஜே.ஏ.ராஜேந்திரம்,  மற்றம் ஆர்.சதாசிவம், பொருளாளர் எஸ்.மாமங்கராசா உட்பட அதன் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரமுகர்கள் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அமெரிக்காவிலிருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்து மாணவர்களுக்கு கல்விச் சேவை மற்றும் சமூகப் பணி ஆற்றி வரும் அருட் தந்தையர்களான பி.எச்.மில்லர், லோரியோ, பொரானிலோ ஆகியோரின் சேவையை பாராட்டி அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இவரின் நூற்றாண்டு விழாவை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு மற்றும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழய மாணவர்கள், கல்லூரியின் அதிபர், ஆசியரிர்கள், மாணாவர்கள மைக்கல் மென் விளையாட்டுக்கழகம் போன்ற அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வளாகத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவருக்காக மலர் வலயம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அருட் தந்தை வெபர் அடிகளார் 1914.02.21ம் திகதி அமெரிக்காவின் நியூஓலியன்ஸ் மாநிலத்தில் பிறந்தார்.  1945ம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்த இவர் 1998 ஏப்ரல் மாதம் மட்டக்களப்பிலேயே மரணமடைந்தார்.

இவரின் உடல் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X