2025 மே 03, சனிக்கிழமை

டெங்கினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளைப்பராமரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.றம்ஸான்

டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட நோயாளிகளைப்பராமரிப்பதற்குத் தேவையான ஒரு கோடி ரூபா பெறுமதியான உபகரணத்தொகுதியொன்றை கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைத்தார்.

2013ஆம் ஆண்டு கல்முனைப்பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோயால் 431 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை இணங்கானப்பட்டதுடன் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

எதிர்காலத்தில் டெங்கு நோயால் மரணம் ஏற்படாது தடுக்கவும் நோய் ஏற்பட்டவர்களை பராமரிப்பதற்குத் தேவையான ஒரு கோடி ரூபா பெருமதியான உபகரணத்தொகுதியொன்றை சுகாதார அமைச்சின் நிதியொதிக்கீட்டில் கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிமனையின் சுகாதாரப்பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பை சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கும் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வை.பி.எம்.அஸ்ரப் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.ஜெவ்பர் ஆகியோரிடம் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் உபகரணத்தொகுதிகளை கையளித்தார்.

ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்ட 10 படுக்கைகளும் அதற்குத் தேவையான உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு இலகுவாக சிகிச்சை அழிக்க முடியும். இதன் மூலம் கொடிய டெங்கு நோயினால் மரணத்தை தவிர்க்கும்;  நோக்கத்துடன் கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் இவ் உபகரணத்தொகுதி வழங்கப்படடது. என சுகாதாரப்பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்ததோடு 2010 இல் இதே போன்ற ஒரு தொகுதி உபகரணங்களை கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும் எங்களால் வழங்கப்பட்டது எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X