2025 மே 03, சனிக்கிழமை

லேபல் இடாத குளிர்பானங்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் லேபல் இடப்படாத 240 குளிர்பான போத்தல்களை சனிக்கிழமை (22) கைப்பற்றியதாக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.றபீக் தெரிவித்தார்.

மேற்படி குளிர்பான போத்தல்களில்; ஆரம்பத் திகதி மற்றும் காலாவதியாகும் திகதி உள்ளடக்கிய லேபல் இடப்பட்டிருக்கவில்லையெனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் காத்தான்குடி சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, உரிய இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டு லேபல் இடப்படாத குளிர்பான போத்தல்களை கண்டெடுத்ததாகவும் அவர் கூறினார்.

இதன் விநியோகத்தர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். 

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாக்ட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.றபீக், பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், எம்.புலேந்திரகுமார், எஸ்.சங்கர் ஆகியோர் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X