2025 மே 03, சனிக்கிழமை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடிப் பிரதேசத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய போஷாக்கான உணவு  பற்றி விழிப்புணர்வூட்டும்  செயலமர்வு  காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தின் ஏற்பாட்டில்; காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் மேற்படி செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கான  போஷாக்கான உணவுகள் பற்றியும் கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பற்றியும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் விளக்கினார்.

இந்தச் செயலமர்வின் இறுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X