2025 மே 03, சனிக்கிழமை

'ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்பட்டால் த.தே.கூ. போட்டியிடாது'

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவாராக இருந்தால்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  எந்தவொரு  தேர்தலிலும்  போட்டியிடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர் பா.அரியநேத்திரன்  தெரிவித்தார்.

இயலுமாக  இருந்தால்  இதைச்  செய்யட்டும். அவர்கள்  எல்லாம்  சம  உரிமை  என்றுதானே  கூறுகிறார்கள். இதைச் செய்தால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள நாங்கள்  இராஜினாமாச்  செய்துவிட்டு  அரசியலிலிருந்து  ஒதுங்குவோமெனவும் அவர் கூறினார்.

துறைநீலாவணை  கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கும் நிகழ்வு அச்சங்க கட்டிடத்தில்  சனிக்கிழமை (22) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
 
'எப்போது  எமக்கு  விடிவு  கிடைக்கிறதோ, எப்போது  எமக்கு  உரிமை  கிடைக்கிறதோ   அன்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அரசியல்  பணியிலிருந்து  ஒதுங்கும். குறிப்பாக  முதலில்  ஒதுங்கக்கூடியவன்  நான்  என்பதை  இவ்விடத்தில் கூறிக்கொள்கிறேன்.

நாங்கள்  ஒரு  அடிமையான  இனம். அடிமைப்பட்டு  பல  இழப்புக்களை  சந்தித்த  இனம். முள்ளிவாய்க்காலில்  ஒரு  இலட்சத்து  50  ஆயிரம்  மக்களை பலி கொடுத்த  இனம். அதற்கு  முன்னாலும்;  பல மக்களை பலி கொடுத்த இனம்.

சமாதானத்திற்கு  பின் அரசாங்கம்  கூறுகின்ற  சமாதானம்  என்னவென்றால், கொங்கிறீட்; மற்றும்; கார்ப்பட் வீதிகளையும் குளங்களையும் பாலங்களையும் கட்டி விட்டு  அரசாங்கத்திற்கு  நன்றிக் கடனாக  இருக்க  வேண்டுமென்பதே.

உலகில் இன்று  பேசப்படுகின்ற  ஒரு  பிரச்சினை  இலங்கைத் தமிழர்களின்  பிரச்சினையே ஆகும். குறிப்பாக  வடக்கு,  கிழக்கு  தமிழ் மக்களின்  பிரச்சினையே. இது  ஒரு  சர்வதேச மயப்படுத்தப்பட்ட  பிரச்சினையாக  உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  வட, கிழக்கு  மக்களின்  தலைமையென்பதை  சர்வதேசம் அங்கிகரித்துவிட்டது. எமது பிரச்சினை  சர்வதேசம்  செல்லக்கூடாது. எமது நாட்டில் பேசித் தீர்க்க வேண்டுமென்பதில் தந்தை  செல்வா  உறுதியாக  இருந்தார். அதை  உதாசீனம்  செய்ததால்  ஆயுதப் போராட்டம் வந்து  இன்று  சர்வதேசம்  சென்றிருக்கிறோம்.

இலங்கை  அரசாங்கத்திடம்  எங்களுக்கு நம்பிக்கை  இல்லை. இலங்கை  அரசாங்கம்  சொல்வதொன்று, செய்வதொன்று. எங்களை  ஏமாற்றி  ஏமாற்றியே  பழகிய அரசாங்கம்  இலங்கை  அரசாங்கம். எந்த  ஆட்சியாக  இருந்தாலும்  சரி  தந்தை  செல்வாவை ஏமாற்றியது. பிரபாகரனை ஏமாற்றியது. இப்போது  சம்பந்தன்  ஐயாவை  ஏமாற்றத்  துடிக்கிறது. ஆனால்,  இலங்கை  அரசாங்கம்  எம்மை  ஏமாற்றியது  தொடர்பாக  1947ஆம்   ஆண்டு தொடக்கம்  சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தி  இருக்கிறோம்.

இப்போது  மட்டக்களப்பில்  பிரதேசவாதம். கிழக்கான், வடக்கான்  என்பது  போய்  இப்போது  மட்டக்களப்பான். மட்டக்களப்பான்  ஒருவன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  தலைவராக  இருந்தால்  தான்  பதவியிலிருந்து  விலகி விடுவதாக ஒரு  பிரதி  அமைச்சர்  கூறியிருந்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர்  கிழக்கு மாகாணத்தைச்  சேர்ந்தவரென்பதை  அவர்  புரிந்துகொள்ள வேண்டும். நான் திரும்பி  அவரிடம்   ஒன்று  கேட்கின்றேன். வருகின்ற  ஜனாதிபதித் தேர்தலில்  ஒரு  தமிழனை  அது மலைநாட்டுத் தமிழனாக இருக்கலாம்  அல்லது கொழும்புத் தமிழனாக இருக்கலாம். அல்லது வட, கிழக்கு  தமிழனாக  இருக்கலாம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X