2025 மே 03, சனிக்கிழமை

இலவச உதவி கிடைக்கும்போது ஏன் கிடைக்கின்றது என கேள்வி எழுப்ப வேண்டும்: கமலதாஸ்

Kogilavani   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

'தற்போதைய நிலையில் இந்துமக்கள் அனைவரும், எந்தவொரு இலவச உதவியும் கிடைக்கும்போது இந்த உதவி ஏன் கிடைக்கின்றது எனக் கேள்வி எழுப்ப வேண்டும்' என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தலைவரும், மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவருமான வ.கமல்தாஸ் தெரிவித்துள்ளார்.

'மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் ஏற்பாட்டில் சர்வமதத்தினுடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தர்மத்தின் வெற்றிக்காக செயற்படல்' எனும் கருத்திட்டத்தின் கீழ் செல்வநாயகம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற ஒன்று கூடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், இணையம் அமைப்பின் அங்கம் வகிக்கும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வமதத் தலைவர்கள் போன்றோர்கள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'யுத்தத்தின் பின்னராக இந்துக்கள் அண்டிவாழும் பிரதேசங்களில் உதவிபுரியும் நோக்குடன் வெளிநாட்டு மக்களின் நிதியுதவியுடன் செயற்பட ஆரம்பித்த அரசசார்பற்ற அமைப்புக்களின் மூலமாக உதவி என்ற பேரில் மதமாற்றங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான செயற்பாடுகள் தற்போது மிக வேகமாக பரவி வருகின்றன.

அந்தவகையில் போர்த்துகீசர் வருகையினாலேயே எமது நாட்டில் மதமோதல்கள் அதிகளவில் ஏற்பட்டது.

அவ்வாறு அபிவிருத்தி உதவி என்றபேரில் தற்போது மக்கள் மத்தியில் மதமாற்றங்கள் தீவிரமாக இடம்பெறுகின்றன. இவற்றுக்கான ஆதாரங்களும் உள்ளன அத்துடன் தற்போது இந்துமக்கள் அனைவரும் எந்தவொரு இலவச உதவியும் கிடைக்கும் போதும் இந்த உதவி ஏன் என கேள்வி எழுப்ப வேண்டும்.

'தற்போது 18 வயது தொடக்கம் 24 வயது வரையிலான பெண்கள் இராணுவத்திற்காக வடகிழக்கு பகுதியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்களுக்கான கொடுப்பனவுகள், 22 வருட சேவைக்காலம், வைத்திய செலவு, 5 வருடத்தின் பின்னர் செந்த இடத்திற்கு இடமாற்றம் போன்ற வசதிகளும் செய்துகொடுக்கப்பட உள்ளன.

எனவே அவர்களின் எதிர்காலங்கள் நல்வகையில் அமையும், சமூகத்தின் மத்தியில் நற்பிரஜை, ஒழுக்கம் போன்ற நன்னடத்தைகளின் கீழ் வாழ இவை வழிவகுக்கும். ஆகையால் இதில் ஆர்வமுள்ள தகுதியுடைய பெண்கள் இணைந்துகொள்ளுமாறும்'; அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X