2025 மே 03, சனிக்கிழமை

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.எச்.ஏ.நசீர் இராஜினாமா

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.எச்.ஏ.நசீர் தனது நகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீளழைத்தல் திட்டத்தின் கீழ் இவர் கடந்த வாரம் இராஜினாமாச் செய்துள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை தலைவர் அஸ்ஸெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

இவரின் வெற்றிடத்திற்கு காத்தான்குடி நகரசபையின் புதிய உறுப்பினராக எஸ்.எச்.பிர்தௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய உறுப்பினரின் பெயர் வர்த்தமானி அறிவித்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய உறுப்பினர் எஸ்.எச்.பிர்தௌஸ் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் பிரதி அதிபராவார்.

மேற்படி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி நகரசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X