2025 மே 07, புதன்கிழமை

யானை தாக்கி பெண் பலி

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவற்குட்பட்ட மினுமினுத்தவெளி காட்டுப் பகுதியில் யானை தாக்கி 75 வயதுடைய பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (28)  உயிரிழந்துள்ளார்.

மாங்கேணி – பாம்கொலனி என்ற இடத்தைச் சேர்ந்த பத்மன் பொண்ணம்மா என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண்ணும் அவரது கணவரும் தேன் எடுப்பதற்காக கிரான் பிரதேச மினுமினுத்தவெளி காட்டுப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், குறித்த பெண்ணின் கணவர் உயிர்தப்பியுள்ளார்.

இச் சம்பவம் தொடரபில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X