2025 மே 07, புதன்கிழமை

அஇம.காங்கிரஸை மக்கள் அங்கிகரித்துள்ளனர்: எம்.எஸ்.சுபைர்

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரை நாடுபூராகவும் ஏற்றுக் கொண்ட அங்கிகாரமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த கொழும்பு வெற்றியாகுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மேல் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதுவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்களை பெற்ற எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்கள் அனைத்தையும், மிகவும் தைரியத்துடனும், தீர்க்க தரிசனத்துடனும் எதிர் கொண்டதன் காரணமாக எமது கட்சியை கொழும்பில் களமிறங்குமாறு அங்குள்ள மக்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த கோரிக்கையை எமது கட்சியின் தலைமை ஏற்றுக் கொண்டு, கொழும்பில் களமிறங்கி ஓர் ஆசனத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

மிகவும் குறுகிய காலத்துக்குள்ளேயே மூவின மக்களையும் இணைத்து கொழும்பில் களமிறங்கி வெற்றி பெற்றதன் மூலம், இந்த போராட்டத்தில் வெற்றியை கண்டுள்ளோம்.

எமது கட்சியையும் கட்சியின் தலைமையையும் நாடுபூராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான வெளிப்பாடே இந்த வெற்றி என கருதுகின்றேன்.

அந்தவகையில் எமது கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X