2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நாவற்குடாவில் டெங்கு பரிசோதனை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகரசபை பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை  திங்கட்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இப்பரிசோதனையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், கிராம அலுவலகர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.

இதன்போது நாவற்குடா பிரதேசத்திலுள்ள வீடுகள், வீட்டுக் கிணறுகள், வெற்றுக்காணிகள், பொதுக்கட்டிடங்கள் பரிசோதனை செய்யப்பட்டன.

மேலும், துப்பரவு செய்யப்படாமலிருந்த  வெற்றுக்காணிகள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு இதன்போது  சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

நாவற்குடா பிரசேத்தில் 30  டெங்கு நோயாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X