2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கடதாசி ஆலை பிரச்சினை: ஜனாதிபதியின் கவனத்திற்கு

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களது சம்பளப் பிரச்சினையை மிக விரைவில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வினைப் பொற்றுத் தருவதாக ஊழியர்கள் மத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருன் தம்பிமுத்து உறுதியளித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் தற்போது 154 ஊழியர்களே கடமையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் ஜனவரி மாதம்; இரண்டாம் வாரம் முதல் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடதாசி ஆலையின் நிர்வாகத்தினரையும் ஊழியர்களையும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆலையில் சந்தித்து கலந்துரையாடும்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருன் தம்பிமுத்து இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இங்கு தொடர்;நதும் கருத்து தெரிவித்த அவர்,

'எமது மாவட்டத்திற்கான பெரும் வளம்தான் இக் காகிதத் தொழிற்சாலையாகும். மூவாயிரம் பேருக்கும் அதிகமானோர் வேலைசெய்த ஆலையில் தற்போது 154 பேருக்கு சம்பளம் வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ் விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத் தருவேன்'  என்று இதன்போது அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X