2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கெவுளியாமடு கிராமத்தில் அபிவிருத்தி பணிகள்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜவ்பர்கான்


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கெவுளியாமடு கிராமத்தில் ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இக்கிராமத்தில் 290 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. இவர்களது தேவைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதியமைச்சர் தலைமையிலான அரச அதிகாரிகள் திங்கட்கிழமை மாலை விஜயமொன்றை மேற்கொண்டனர்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால பிரதேச செயலாளர் உட்பட மட்டக்களப்பு மேற்கு வயல கல்வி பணிப்பாளர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இக்கிராமத்தில் இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் குடிநீர் மலசல கூடவசதிகள் மின்சார வசதி ஆரம்ப பாடசாலை நிர்மாணம் என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X