2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கொண்டுசென்றவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனமும் சந்தேக நபர் ஒருவரும் இன்று(26) அதிகாலை கைது செய்யப்பட்டள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து ஓட்டமாவடிக்கு கொண்டுவரப்பட இருந்த நிலையில் இன்று(26) அதிகாலை வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதுரை மற்றும் பாலைபாலை மரங்கள் இருபத்தி நான்கு மற்றும் மரக்குற்றிகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X