2025 மே 15, வியாழக்கிழமை

தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலத்தின் திருவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்றதும் பழமையானதுமான தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அற்புதம் நிறைந்த ஆலயமாக கிறிஸ்தவ மக்களினால் நம்பப்படும் இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழாவானது ஒன்பது தினங்கள் நடைபெறவுள்ளது.
 
இதன்கீழ் இன்று ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை இக்கேஸ் ஜோசப் தலைமையில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
 
கொடியேற்றத்தினை தொடர்ந்து ஆலயத்தில் ஜெபமாலை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அருட்தந்தை அந்தோனிராஜினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
 
தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவானது ஒன்பது தினங்கள் நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பின் ஒவ்வொரு கிராமங்களும் திருவிழாவினை நடத்துவது சிறப்பம்சமாகும்.
 
தேற்றாத்தீவு,குருக்கள்மடம்,கொக்கட்டிச்சோலை,அம்பிளாந்துறை,பழுகாமம்,களுவாஞ்சிகுடி, களுதாவளை,மாங்காடு ஆகிய பிரதேச மக்களினால் இந்த திருவிழாக்கள் நடத்தப்படுவது சிறப்பம்சமாகும்.
 
இதன்படி எதிர்வரும் மூன்றாம் திகதி நற்கருணை பவனி நடைபெறவுள்ளதுடன் நான்காம் திகதி காலை தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை வி.அன்னதாஸ் அடிகளார் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
 
இந்த பெருவிழால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .